Youth performs funeral for burnt vehicle-bike on the road Photograph: (thanjavur)
அண்மையாகவே நடுசாலைகளில் கார், பைக் உள்ளிட்டவை திடீரென தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இ-வெகிகல்ஸ் எனும் பேட்டரி வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் சாலையில் பைக் புகைந்த நிலையில் வினோதமாக செயல்பட்ட இளைஞரின் வீடியோ காட்சி ஒன்று வைரலாகி வருகிறது.
தஞ்சாவூரில் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென பைக்கில் இருந்து புகை வெளிப்பட்டது. இதனால் சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்திய அவர் தன் கையில் இருந்த பையில் இருந்து எலுமிச்சை பழங்களை கீழே போட்டுவிட்டு உடனே மாலையை எடுத்து பைக்கிற்கு போட்டுவிட்டு பின்னர் கையில் இருந்த இரண்டு தேங்காய்களை எடுத்து, ஒன்றை பைக்கின் முன்புறமும் மற்றொன்றை பைக்கின் பின்புறமும் சாலையில் உடைத்து இறுதிச் சடங்கு போல வழிபாடு நடத்திய சம்பவத்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.