கார் ஏற்றி இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னையில் நித்தின் சாய் என்ற கல்லூரி மாணவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த விபத்தில் சிக்கிய நித்தின் சாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாகத் திருமங்கலம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திமுக பிரமுகரின் பேரனான சந்துருவை போலீசார் கைது செய்துள்ளனர்.
Follow Us