நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில், “நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், பொன்பரப்பிப்பட்டி கிராமம், பெருமாள் கோவில் காடு என்ற பகுதியில் வசித்து வந்தவர் பழனிசாமி (வயது 33) (தந்தை பெயர் : முருகேசன்) என்பவர் கடந்த 26.10.2025 அன்று காலை சுமார் 9.00 மணியளவில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கட்டிபாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்றார்.
அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/01/cm-mks-sad-2025-11-01-07-27-09.jpg)