Advertisment

தவெக மாநாட்டிற்கு வந்த இளைஞர் மூச்சுத்திணறி உயிரிழப்பு

புதுப்பிக்கப்பட்டது
A4956

tvk Photograph: (incident)

மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று (21.08.2025) தொடங்கி நடைபெற்றது. சுமார் 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் மாநாட்டு மேடை அமைக்கப்பட்டு அக்கட்சி நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் அமர்வதற்கு 200 இருக்கைகள் போடப்பட்டன. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இந்நிலையில் தவெக மாநாட்டிற்கு வந்த நீலகிரியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ரோஷன் என்பவர்  மாநாட்டுத் திடலில் மயக்கமடைந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் மூச்சுத்திணறி உயிரிழந்திருப்பதாக  முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக விருதுநகரில் தமிழக வெற்றிக் கழக கட்சியை வரவேற்று பேனர் வைக்க முயன்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.  

madurai manadu police tvk vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe