தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி - ஜெயலட்சுமி தம்பதியினர். இவர்களது மகன் 25 வயதான நவீன் குமார், செல்போன் கடையில் வேலை பார்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி நண்பருடன் வெளியே சென்ற நவீன் குமார், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால், எங்கு தேடியும் நவீன் குமார் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து வீரப்பாண்டி காவல் நிலையத்தில் நவீன் குமாரின் தாயார் அக்டோபர் 8 ஆம் தேதி தனது மகனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால், புகார் அளித்து 5 நாட்களுக்கு மேலாகியும், நவீன் குமரை கண்டுபிடிக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாகக் குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் நவீன் குமாரை அழைத்து சென்ற அவரது நண்பரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த நபர் அதிர்ச்சி தகவல அளித்துள்ளர்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நவீன்குமாரை கொலை செய்து ஆற்றியில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆற்றில் வீசப்பட்ட நவீன் குமாரின் உடலை தேடுவதற்கு காவல்துறையினர் தீயணைப்பு துறையின் உதவியை நாடினர். பின்னர் அவர்களுடன் சேர்ந்து காவல்துறையினரு நவீன்குமாரி உடலி தேடிவந்தனர். இந்த தகவல் நவீன்குமார் பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு தெரியவர, ஆத்திரமடைந்த அவர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், நவீன் குமாரின் உடலி கண்டுபித்து, அவரை கொலை செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தேனி டி.எஸ்.பி. முத்துக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், உடலை கண்டுபிடித்து கொலை செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து, ஆற்றில் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட நவீன் குமாரின் உடலைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் நான்கு மணி நேரத் தேடுதலுக்குப் பின், உப்புக்கோட்டை கருப்புசாமி கோயில் அருகே உள்ள ஆற்றின் ஓரத்தில் உடலை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் தேனி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடலைக் கண்ட பொதுமக்களும் உறவினர்களும் கதறி அழுதனர். இதனால், உப்புக்கோட்டை கிராமத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.