திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், அய்யம்பேட்டை பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் சத்தியமூர்த்தி (25) என்பவர் 30ம் தேதி விடியற்காலையில் தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது அதே தெருவில் சாலையோரம் நிற்க வைத்து இருந்த மாருதி ஆம்னி வேன், டாடா ஏசி, ஆட்டோ உள்ளிட்ட 4 வாகனங்களையும் அடித்து கண்ணாடியை நொறுக்கி உள்ளார். கல்லை ப்போட்டு கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று ஆட்டோவில் ஆட்டோ ஓட்டுநர் வைத்து இருந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். கண்ணாடி உடைந்தது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் அந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/08/31/a5058-2025-08-31-15-14-29.jpg)
ஒரு வாலிபர் நடந்து செல்லும் பொழுது கார் கண்ணாடியையும் ஆட்டோவையும் உடைத்துச் சென்றது தெரிந்தது. அவருடைய உருவத்தை வைத்து யார் என தேடியபோது சத்தியமூர்த்தி என்ற வாலிபர் அடித்து நொறுக்கியது அம்பலமானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து வீட்டிலிருந்து சத்தியமூர்தியை அழைத்துவந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சாலையில் செல்லும் போது அமைதியாகச் செல்லாமல் கண்ணாடியை உடைத்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்.