கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய சிறப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் பால. முரளி தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் சதீஷ் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். அறிவழகன் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார். 

Advertisment

மாவட்டத் தலைவர் வினோத்குமார், பொருளாளர் கலைவாணன் வாழ்த்துரை வழங்கினார்கள். புதியதாக 11 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றிய செயலாளராகப் பால.முரளி, தலைவராக சதீஷ், பொருளாளராக சிவலோகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய ஒன்றிய நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர் சின்னதம்பி அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார். இந்த மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

Advertisment

மாநாட்டில் பரங்கிப்பேட்டையில் இயங்கும் தனியார் மின் நிலையத்திற்கு உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கவேண்டும். கிள்ளை அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் மருத்துவர்களை பணியமர்த்த வேண்டும். தீத்தாம்பாளையம் மக்களுக்கு ஒப்படைப்பு பட்டாவை அளந்து கொடுக்க வேண்டும். நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.