திருப்பூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்து சம்பந்தப்பட்ட இளைஞர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
அதே சமயம் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதோடு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.
திருப்பூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் பயிலும் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.