ஈரோட்டில் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஈரோடு சென்ட்ரல் தியேட்டர் ரோடு பின்புறம் பகுதியில் உள்ள மைதானத்தில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மைதானத்தில் கேட்பாரற்று கிடந்த சாக்கு பை ஒன்றை போலீசார் சோதனை செய்தனர்.அதில், 1.300 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில், மரப்பாலத்தைச் சேர்ந்த பாபு (28) என்பவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாபுவை போலீசார் கைது செய்தனர்.

Advertisment