புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் சரகம் விளாப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் கௌசல்யா வயது 28. இவர்கள் வீட்டில் ஆடு, மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. கால்நடைகளை வயல் பகுதியில் ஓட்டிச் சென்று வீட்டில் இருக்கும் கௌசல்யா மேய்த்து வருவது வழக்கம்.
அதேபோல இன்று திங்கள் கிழமை காலை வீட்டில் இருந்து ஆடு, மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற கௌசல்யாவை மாலை வரை வீட்டிற்கு வரவில்லை. காணவில்லை என்று அவரது அப்பா செல்வராஜ் தேடிச் சென்றபோது விளாப்பட்டி - பாக்குடி சாலையில் இருந்து 200 மீ தூரத்தில் கௌசல்யா சடலமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கதறியவர் போலீசாருக்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு இலுப்பூர் டிஎஸ்பி, அன்னவாசல் போலீசார் வந்து ஆய்வு செய்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கௌசல்யா உடலில் வெளிக்காயங்கள் இல்லை என்றாலும் உயிருக்குப் போராடிய நேரத்தில் பறித்த கையில் புல் செடிகள் இருந்தது. மேலும் நாக்கு சிறிது வெளியே வந்த நிலையிலும் இருந்தது. இளம் பெண் தனியாக இருப்பதைப் பார்த்து வெளி நபர்கள் வந்து கொலை செய்திருப்பார்களா என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மாடு மேய்க்கச் சென்ற இளம் பெண் மர்மமாக இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/a5882-2025-12-22-22-46-13.jpg)