திருவண்ணாமலையில் திமுக இளைஞரணி வடக்கு மண்டல மாநாடு இன்று (14.12.2025)  நடைபெற்றது.  அப்போது அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், “பொதுவாக ஒருவர் பிறந்த நாள் என்று சொன்னால் வெள்ளாடை உடுத்திக் கொள்ளலாம் என்று கருதுவார்கள்.  இன்னும் கொஞ்சம் ஆன்மீகவாதியாக இருந்தால் மஞ்சள் ஆடை உடுத்திக் கொள்ளலாம் என்று கருதுவார்கள். இன்னும் கொஞ்சம் மென்மையானவளாக இருந்தால் அவருக்கு பிடித்த உடையை அணிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள்.

Advertisment

இந்த ஆண்டு அவருடைய (துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின்) பிறந்த நாள் விழாவில் அவர் உடுத்திய ஆடை தந்தை பெரியார் என்ன எண்ணினாரோ அவர் எதனை உடுத்தினாரோ அந்த கருப்பாடையை உணர்ந்து, அதனை உடுத்திக் கொண்டு அவர் அனைவரையும் அன்றைக்கு பிறந்தநாள் விழாவில் பார்த்தார். இதன் மூலம் எனக்கு என்ன நினைவு ஊட்டுகிறது என்று சொன்னால் இன்னொரு 50 ஆண்டு காலத்திற்கு நான் எப்பொழுதும் சொல்வதை போல திராவிட இயக்கம் என்பது 5 தலைமுறைகளை கடந்து வந்திருக்கிறது. முதல் தலைமுறை தந்தை பெரியார், 2வது தலைமுறை பேரறிஞர் அண்ணா, 3வது தலைமுறை கலைஞர், 4வது தலைமுறை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவார். 

Advertisment

இந்த இயக்கத்தை தமிழர்களுக்கு 50 ஆண்டு காலம் அழைத்துச் செல்வதற்கு 5வது தலைமுறையாக இருக்கிறவர் உதயநிதி ஆவார். அவர் பிறந்தநாள் அன்று கருப்பாடை அணிந்திருந்தார். எங்களை போன்றவர எல்லாம் பூரித்து போனோம். அண்ணன் அவர்களே (முதல்வர் மு.க. ஸ்டாலின்) நான் இப்படி மகிழ்வாக சொல்லலாம் என்று கருதுகிறேன். அது சொன்னால் இயக்கம் மகிழும் என்று கருதுகிறேன். எங்களுக்கு ஒரு இளம்பெரியாரை தந்ததற்காக, இளம் பெரியார் உதயநிதியை தந்ததற்காக அண்ணன் அவர்களே (முதல்வர் மு.க. ஸ்டாலின்) உங்களுக்கு கோடான கோடியை தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார்.