கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பாஸ்கர் மற்றும் அவரது அண்ணன் தவசி ஆகியோர் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், இன்று (ஜூலை 17) காலை, பாஸ்கர் தனது வீட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு கள்ளக்குறிச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்தனர். கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த பாஸ்கரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த மர்மமான மரணம் தொடர்பாக, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஸ்கர் கொலை செய்யப்பட்டாரா அல்லது கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து, தடயங்கள் மற்றும் சாட்சியங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த சம்பவம் இந்திரா நகர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே மரணம் குறித்து உண்மை நிலை தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2025/07/17/103-2025-07-17-17-54-38.jpg)