Advertisment

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த இளைஞர்; வீட்டிற்குச் சென்ற பின் எடுத்த விபரீத முடிவு!

police

young man slit the throat of a college student made a decision after going home

வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் 19 வயது கல்லூரி மாணவிம் இன்று தொரப்பாடி அடுத்த ராம்சேட் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடன் பேச்சு கொடுத்து வந்த அரியூர் ஜீவா நகரை சேர்ந்த விக்னேஷ் (19) என்ற இளைஞர், திடீரென கத்தியால் கல்லூரி பெண்ணின் வயிற்றில் குத்தி, கழுத்தை அறுத்து தப்பி ஓடி உள்ளார். மத்திய சிறை காவலர்கள் குடியிருப்பு அருகே சாலையில் விழுந்த கல்லூரி மாணவி, செல்போன் மூலம் தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Advertisment

அதன் பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் மாணவியை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதற்குப் பிறகு தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த பாகாயம் காவல்துறையினர், கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷை தேடி வந்த போது, அவர் தப்பி ஓடிச் சென்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

இதனை அடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ஒருதலை காதலால் மாணவியை கத்தியால் குத்தியது தெரியவந்துள்ளது.

college student Vellore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe