Advertisment

கலெக்டர் ஆபீஸா? ரேஸ்கோர்ஸா? - ஆட்சியர் அலுவலகத்திற்குள் அதிவேகமாக சென்ற இளைஞர்!

01

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் மூன்று தளங்களிலும் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தரைத்தளத்தில் செயல்பட்டுவரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்குச் செல்வதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேகமாகச் சறுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய மாற்றுத்திறனாளிகள் தங்களது வாகனங்களில் அலுவலகத்திற்கே எளிதில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காகப் போடப்பட்டுள்ள சறுக்கு பாதையில் வடக்கு சார் உதவி கருவூல அலுவலகத்திற்குப் பத்திரங்களை ஏற்றிச் சென்ற இளைஞர் ஒருவர் பைக்கில் அலுவலகத்திற்குள் வேகமாகச் சென்ற வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர் அலுவலகங்களுக்குள் மத்தியில் பைக்கில் சென்று அங்குப் பத்திரங்களை இறக்கி வைப்பதும், பின்னர் மீண்டும் பத்திரங்களை எடுப்பதற்காக அலுவலகத்திற்கு உள்ளேயே பைக்கை வேகமாக ஓட்டி வந்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாதையில் அலுவலகங்களுக்குள்ளே இளைஞர் ஒருவர் பைக்கில் அதிகமாகச் சென்ற வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதே அலுவலகத்திற்கு மற்றொரு நபர் பத்திரங்களைப் பைக்கில் ஏற்றி வந்து பின்னர் பைக்கை வெளியிலேயே நிறுத்திவிட்டு அதனைத் தூக்கிச் சென்று கருவூலத்தில் வைக்கும் நிலையில், இந்த இளைஞர் மட்டும் அலுவலகங்களுக்குள் பைக்கை ஓட்டி வந்து பத்திரங்களை இறக்கி வைத்தது ஏன்? இதனை அலுவலர்கள் எப்படி அனுமதித்தார்கள்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பைக்கில் இளைஞர் வேகமாகச் சென்றதைப் பார்த்த ஊழியர்கள், “இது ஆட்சியர் அலுவலகமா இல்லை பைக் ரேஸ் கோர்ஸா?” எனக் கேள்வி எழுப்பினர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது.

collector office madurai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe