Advertisment

முத்தம் கொடுத்த ஆண் நண்பர்; நாக்கை கடித்துத் துப்பிய இளம்பெண்!

4

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டம், தரியாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதான சாம்பி. இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் சாம்பிக்கு பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியது. அதனால் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்தனர்.

Advertisment

இந்தச் சூழலில் அந்த இளம்பெண்ணுக்கு வீட்டில் வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதனால் சாம்பியுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். ஆனால் சாம்பி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில், “எனக்கு வீட்டில் திருமணம் நிச்சயமாகி விட்டது. இனிமேல் இதெல்லாம் வேண்டாம். நாம் உறவை முறித்துக்கொள்வோம்” என்று அந்த இளம்பெண் சாம்பியிடம் தெளிவாகக் கூறியிருக்கிறார். இருப்பினும் சாம்பி அவரை விடாமல் உறவை தொடருமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் நவம்பர் 17-ஆம் தேதி தரியாபூர் கிராமத்தில் உள்ள குளக்கரையில் அந்த இளம்பெண் மண் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சாம்பி, இளம்பெண்ணை மறித்து முத்தம் கொடுத்து பாலியல் ரீதியாக அத்து மீற முறயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், சாம்பியின் நாக்கை கடித்து துப்பியுள்ளார். இதில் சாம்பியின் நாக்கு  இரண்டு துண்டானது. இதனால் வலி தாங்க முடியாமல் சாம்பி அலறித்துடித்துள்ளார். உடனடியாக அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சாம்பியையும் துண்டிக்கப்பட்ட நாக்குத் துண்டையும் எடுத்துக்கொண்டு அருகிலுள்ள சமூக சுகாதார நிலையத்துக்கு (CHC) அழைத்துச் சென்றனர். 

அங்கு aவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. ஆனால், சாபியின் நிலைமை மோசமானதால் கான்பூரிலுள்ள ஹாலெட் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பில்ஹவுர் காவல் நிலைய அதிகாரி கூறுகையில், “சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

வலுக்கட்டாயமாக முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்த ஆண் நண்பரின் நாக்கை இளம்பெண் கடித்துத்  துப்பிய சம்பவம் கான்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

girl friend police uttar pradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe