'உலகம் உங்கள் கையில்' எனும் லேப்டாப் வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''எல்லாத்துறையிலும் வளர்ச்சி வந்து கொண்டிருக்கிறது. அதனால் பட்டப்படிப்பு படிப்பதை தாண்டி தொழில்நுட்பங்கள் அப்டேட் ஆகி வருகிறது. நீங்களும் அதற்கேற்றாற் போல் அப்டேட் ஆகுங்கள். இனிமேல் டெக்னாலஜி படிப்பது ஆப்ஷன் கிடையாது. உங்களுடைய கேரியருக்கு இது அவசியமாக இருக்கிறது.
தொழில்நுட்பம் எல்லாத்துறைகளிலும் நுழைந்து விட்டது. எல்லாருடைய கைகளுக்கும் தொழில்நுட்பம் வந்து விட்டது. அதை முறையாகப் பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும். ஆனால் செயற்கை நுண்ணறிவால் ஒருபோதும் மனிதர்களை ரீப்ளேஸ் பண்ண முடியாது. போன ஜுனரேஷன் இளைஞர்கள் அறிவுக்காக பல புத்தகங்களை தேடி அலைய வேண்டும் ஆனால் இப்பொழுது உங்களுக்கு தேவையான தகவல்களை, அறிவை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் எந்த இடத்தில் இருந்தும் அதை நீங்கள் பெறலாம். இந்த வளர்ச்சியைக் குறை சொல்லி விலகிப் போவது முட்டாள்களின் பாதை. இதைப் பயன்படுத்தி வாழ்க்கையின் உச்சத்தைத் தொட வேண்டியது தான் உங்களுடைய வேலை.
இன்றைக்கு உங்கள் கைகளில் வந்திருக்கக்கூடிய லேப்டாப்பை சும்மா படம் பார்க்க, கேம் விளையாட பயன்படுத்த போகிறீர்களா அல்லது உங்களுடைய கேரியரை உயர்த்த லான்ச் பேட் ஆக பயன்படுத்தி போகிறீர்களா என்பதுதான் உங்கள் முன்வைக்கக்கூடிய கேள்வி. எல்லாவற்றுக்குமே நல்லது கெட்டது என இரண்டு பக்கம் உள்ளது. அதில் நீ எந்த பக்கத்தை தேர்ந்தெடுக்கிறீர்கள். அதைப் பொறுத்து தான் வெற்றி உங்கள் பக்கம் வந்து சேரும். நான் சொல்வதெல்லாம் உங்களுடைய கெரியர் எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள் தான் டாப்பில் இருக்க வேண்டும். திறனும், பகுத்தறிவும், அறிவியல் பார்வையுடன் இணைந்து செயல்பட்டால் புது கண்டுபிடிப்பு வரும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/05/5950-2026-01-05-18-58-28.jpg)