உலக அளவில் சமூக வலைத்தளங்கள் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில், குறிப்பிட்ட சில சமூக வலைத்தளங்கள் பெரும்பாலான மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில், குறிப்பிடத்தக்கச் சமூக வலைத்தளம் "எக்ஸ்" ஆகும். இது முன்பு "டிவிட்டர்" எனும் பெயரில் இயங்கி வந்தது. இதனை, உலக பணக்காரர் "எலான் மஸ்க்" கடந்த 2022ஆம் ஆண்டு வாங்கினார். இதையடுத்து, இது "எக்ஸ்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, மேலும் மேம்படுத்தப்பட்டது.
இந்த சமூக வலைத்தளத்தை உலக அளவில் 586 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 30 மில்லியன் மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், எக்ஸ் தளப்பக்கத்தில் அதிக அளவிலான ஆபாசப் படங்கள் வலம் வருவதாகவும், இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பயனர்கள் நீண்ட காலமாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில், பயனர்களின் கோரிக்கையை ஏற்று எக்ஸ் நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எக்ஸ் தளத்தில் ஆபாசப் படங்கள் மற்றும் பதிவுகள் ஆகியவற்றிற்குத் தடை விதிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
குறிப்பாக, இந்த தடை இந்தியாவிற்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில், இனி வரும் காலங்களில் எக்ஸ் தளத்தில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் கட்டப்படாது தெரிவிக்கப்பட்டுக்கது. இந்திய அரசின் சட்ட விதிகளைப் பின்பற்றும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த நடவடிக்கை ஒரு நல்ல முயற்சி என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow Us