தமிழ்த் திரைப்படத்துறையில் 200 திரைப்படங்களுக்கு மேலாக திரைக்கதையும், 40 திரைப்படங்களுக்கு கதையும் எழுதி, 18 திரைப்படங்களைத் தயாரித்தவர் கலைஞானம். இவரது இயற்பெயர் கே.எம்.பாலகிருஷ்ணன் ஆகும்.
மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், எழுமலையில் பிறந்தவர். தன்னுடைய 18 வது வயதிலேயே வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். பிறகு சின்னப்ப தேவர் தயாரிக்கும் படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணிபுரிந்தார். ரஜினிகாந்த் நடித்த ஆறுபுஷ்பங்கள், அல்லி தர்பார், போன்ற படங்களை இயக்கியதோடு அவர் நடித்த பைரவி திரைப்படத்தை தயாரித்தார்.
சினிமாத் துறையில் அரை நூற்றாண்டைக் கடந்த இவர் தன்னுடைய திரைப்பட அனுபவங்களைக் கொண்டு சினிமா சீக்ரெட் என்ற நூலை வெளியிட்டார். இவர் தன்னுடைய 96-வது பிறந்தநாளை இன்று வெகு சிறப்பாக கொண்டாடினார். இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் நடிகர் சிவக்குமார் தன்னுடைய குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்ததும் குறிப்பிடத்தக்கது.