Advertisment

25 ஆண்டுகளுக்கு பின் பெண் அதிபரை பெறும் தேசம்...

ஸ்லோவாக்கியா நாட்டின் முதல் பெண் அதிபராக சுசனா என்பவர் பதவி ஏற்றுள்ளார்.

Advertisment

zuzana

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பத்திரிகையாளர் ஜான் குசியாக் என்பவர் ஸ்லோவாக்கியாவில் அரசியல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு இடையே உள்ள தொடர்பை வெளியுலகிற்கு வெட்ட வெளிச்சமாக வெளிக்கொண்டுவந்தார். இதனால் கடந்த ஃபிப்ரவரி மாதம் அவருடைய வீட்டில் காதலியுடன் சுட்டுக் கொல்லப்பட்டார் குசியாக்.

இந்த கொலை நாட்டை ஒரு உழுக்கு உழுக்கியது. பத்திரிகையாளர் குசியாக்கின் மரணத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பல மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனை தொடர்ந்து ஸ்லோவாக்கியாவின் பிரதமராக இருந்த ராபர்ட் ஃபிகோ பதவி விலகினார்.

இந்நிலையில் மார்ச் 30ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் லிபரல் ஸ்லோவாக்கியா கட்சியின் அதிபர் வேட்பாளராக சுசனா போட்டியிட்டார். அவர் 58.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அரசியல் பின்புலமே இல்லாமல் வந்த சுசனா, வழக்கறிஞர், சுற்றுச்சூழல் ஆர்வலர், ஊழலுக்கு எதிராகத் குரல் கொடுத்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டில்தான் லிபரல் ஸ்லோவாக்கியா கட்சியில் இணைந்தார்.

இந்த அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் சுசனா ஸ்லோவாக்கியாவின் முதல் பெண் அதிபராக பதவி ஏற்கிறார். அதேபோல ஸ்லோவாக்கியாவின் மிகக் குறைந்த வயதுடைய அதிபரும் சுசனாதான்.

journalist elections first lady President slovakia
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe