Skip to main content

உணவு, தண்ணீர் இல்லாமல் உயிரிழந்த 200 யானைகள்... காண்போரை கலங்க வைத்த புகைப்படங்கள்...

Published on 13/11/2019 | Edited on 13/11/2019

உணவு, தண்ணீர் இல்லாமல் பட்டினியால் 200 யானைகள் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

zimbabwe drought costs lives of 200 elephants

 

 

சர்வதேச அளவில் பருவநிலை மாறுபாடு குறித்து அதிக அளவில் விவாதிக்கப்பட்டு, அதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது எனலாம். அந்த வகையில் ஜிம்பாப்வே நாட்டில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, உணவு, தண்ணீர் இல்லாமல் பட்டினியால் 200 யானைகள் உயிரிழந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துவிட்டதால் அங்கு கடுமையான வறட்சி நிலவி வருவம் நிலையில், விலங்கியல் பூங்காக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நீர்நிலைகள் முழுவதும் வற்றி, மரங்கள், செடிகள் காய்ந்து தாவரங்கள் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த மோசமான வறட்சியால் ஜிம்பாப்வேயில் நாட்டில் உள்ள வாங்கே தேசிய பூங்காவில் உணவு கிடைக்காமல்  200க்கும் மேற்பட்ட யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து  சிங்கங்கள், காட்டு நாய்கள், 50 காட்டெருமைகள், 40 ஒட்டகசிவிங்கிகள், 2000 யானைகள் ஆகிய விலங்குகளை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த யானைகள் பாதிக்கப்பட்டும், இறந்தும் உள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் பரவி, பலரையும் கண்ணீர் விட வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வறட்சி நிவாரணம் ரூ.181 கோடி; தமிழக அரசு அறிவிப்பு

Published on 12/08/2023 | Edited on 12/08/2023

 

Drought relief Rs.181 crore Tamil Nadu Government Notification

 

கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை சராசரி அளவைவிட அதிகமாகப் பெய்திருந்தாலும் புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் குறைவான அளவே மழை பெய்து பயிர்கள் கருகின. இதனால்,கடந்த 2022 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 2022 டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் 2022 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் முழுப் பருவத்திலும் போதிய மழையில்லாததால் பயிர்கள் கருகி, 33 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் பயிர் இழப்பு ஏற்பட்டதால், இம்மாவட்டங்களில் "மிதமான விவசாய வறட்சியை"  அறிவித்திட அரசு ஆய்வு செய்தது.

 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் மற்றும் மணமேல்குடி, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை, மானாமதுரை, இராமநாதபுரம் மாவட்டம் போகளூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோயில், பரமக்குடி, ஆ.எஸ். மங்கலம், இராமநாதபுரம், திருப்புல்லானி, திருவாடானை, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன் கோவில், தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மற்றும் திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 1 லட்சத்து 42 ஆயிரத்து 832 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

 

இதையடுத்து கடந்தாண்டு வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் பாதிப்புக்குள்ளான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 ஆயிரத்து 746 விவசாயிகளுக்கு 6 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரத்து 714 ரூபாயும், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1 லட்சத்து 34 ஆயிரத்து 305 விவசாயிகளுக்கு 132 கோடியே 70 லட்சத்து 95 ஆயிரத்து 775 ரூபாயும், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆயிரத்து 847 விவசாயிகளுக்கு 25 கோடியே 76 லட்சத்து 85 ஆயிரத்து 982 ரூபாயும், தென்காசி மாவட்டத்தில் 17 ஆயிரத்து 96 விவசாயிகளுக்கு 13 கோடியே 85 லட்சத்து 38 ஆயிரத்து 930 ரூபாயும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 61 விவசாயிகளுக்கு 4 லட்சத்து 43 ஆயிரத்து 273 ரூபாயும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்து 220 விவசாயிகளுக்கு 2 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 964 ரூபாயும், என மொத்தம் ஆறு மாவட்டங்களில் 25 வட்டாரங்களில் உள்ள 1 லட்சத்து 87 ஆயிரத்து 275 விவசாயிகளுக்கு 181 கோடியே 40 லட்ச ரூபாய் இடுபொருள் மானிய நிவாரண உதவி வழங்கிட தமிழ்நாடு அரசால் நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

தமிழகத்தில் 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அரசிதழில் வெளியீடு 

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Gazette 25 taluk as drought affected areas in Tamil Nadu

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால் 33 சதவிதத்திற்கும் அதிகமாக பயிர்ச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய இரு வட்டங்களும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய 4 வட்டங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை ஆகிய 11 வட்டங்களும் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 6 வட்டங்களும், தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள ஆள்வார்திருநகரி வட்டமும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  நரிக்குடி, திருச்சுழி  என இரு வட்டங்கள் என மொத்தம் 25 வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.