இந்தியாவில்கோவிஷீல்ட், கோவாக்சின் என்ற இரண்டுதடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில், கோவிஷீல்ட் தடுப்பூசியைசீரம்நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்திருந்தது. கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத்பயோ-டெக்நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டபோது, மூன்றாம்கட்ட சோதனைமுடிவதற்கு முன்பேஒப்புதல் அளிக்கப்பட்டது எனசர்ச்சை எழுந்தது.
இருப்பினும் இந்த தடுப்பூசிபயன்பாட்டிற்குவந்தது. இந்தியப் பிரதமர் மோடியும்கடந்த ஒன்றாம்தேதி, கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இந்தநிலையில், பாரத்பயோ-டெக்நிறுவனமும், மூன்றாம்கட்ட ஆய்வகப் பரிசோதனையில், கோவாக்சின் தடுப்பூசி, 81 சதவீதம்செயல்திறன் கொண்டதுஎனத் தெரியவந்திருப்பதாக அறிவித்தது.
இந்தநிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு ஜிம்பாப்வே ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அந்நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து அந்தநாட்டிற்கு, இந்தியா விரைவில் கோவாக்சின் தடுப்பூசியை அனுப்பும் எனத் தெரிகிறது. கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரித்த முதல் ஆப்பிரிக்க நாடுஜிம்பாப்வே என்பதுகுறிப்பிடத்தக்கது.