கூகுள் நிறுவனத்தின் கிளை நிறுவனமான யூடியூப், தற்போது இந்தியாவில் ஆடியோ ஸ்ட்ரீமிங் தொடங்குகிறது. ஏற்கனவே ஜியோ சாவன், அமேசான் மியூசிக், ஆப்பிள் மியூசிக் மற்றும் ஸ்பாட்டிஃபை போன்ற ஆப்கள் இருக்கிறது.
இதில் ஸ்பாட்டிஃபை ஆப் இந்த மாதம் தொடக்கத்தில் தான் இந்தியாவிற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து யூடியூப் மியூசிக் செயலியும் இணைந்துள்ளது. இதற்கு மாதம் 99 ரூபாய் என கட்டணமும் அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
வீடியோ உடன் இசை சேவையையும் சேர்த்து பெற 129 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்தச் சேவையை மூன்று மாதத்திற்கு கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாகப் பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.