Advertisment

நேருக்கு நேர் போராடி சிங்கத்தை கொன்ற இளைஞர்...

gfbggb

Advertisment

அமெரிக்காவின் கொலரடோ பகுதியில் தன்னை தாக்க வந்த சிங்கத்தை எதிர்த்து நின்று போராடி இளைஞர் ஒருவர் கொன்றுள்ளார். கொலரடோவின் மேற்கு மலை அடிவாரத்தில் சிங்கங்கள் அதிகம் வாழ்கின்றன. அந்த பகுதியில் இளைஞர் ஒருவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது சிங்கம் ஒன்று எதிர்பாராத விதமாக பின்னிருந்து தாக்கியது. சிங்கத்தின் இந்த எதிர்பாராத தாக்குதலில் இருந்து சட்டென்று சுதாரித்த அவர், அந்த சிங்கத்தை பார்த்து பயந்து ஓடாமல் எதிர்த்து சண்டையிட ஆரம்பித்துள்ளார். இந்த சண்டையில் சிங்கம் அவரது கையின் மணிக்கட்டை கடித்த நிலையில் அவர் சிங்கத்தின் தலையை தொடர்ந்து அருகிலுள்ள பாறையில் மோதியபடி இருந்துள்ளார். இதனால் அவரது மணிக்கட்டை விட்ட அந்த சிங்கம் சிறிது நேரத்தில் இறந்தது. இதில் அந்த இளைஞரின் கை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். சிங்கத்திடம் சண்டை போட்டு வெற்றி பெற்ற அந்த இளைஞரை அந்த பகுதியில் உள்ள பலரும் ஆச்சரியத்துடன் மருத்துவமனையில் வந்து பார்த்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

lion colarado
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe