பாகிஸ்தானில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தானில் உள்ள நசிராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் 22வயதான அப்துல் பகி. இவர் தன் தந்தையிடம் சென்று, தான் ஒரு பெண்ணை விரும்புவதாகவும், அவளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவரும் அவரது நான்கு சகோதரர்களும் இணைந்து அவரை அடித்து துன்புறுத்தினர். அத்துடன் மட்டும் நிற்காமல் இரு கண்களையும் ஸ்பூன் வைத்து குத்தி எடுத்துள்ளனர். அதன் பின் அப்துல் பகி கதறி அழுதுள்ளார். பின்னர் பக்கத்து வீட்டுகாரர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்துள்ளனர். அவரின் மற்றோரு சகோதரருக்கு தகவல் அளிக்கப்பட்டு அதன்பின் அவர் அப்துல் பகியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அப்துல்பகி இது குறித்து கூறியது. ’நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்,அவளை திருமணம் செய்து வைக்குமாறு என் தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவரும், என் அண்ணன்களும் என்னை அடித்து துன்புறுத்தினர். என் அம்மாவையும் ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு என்னை அடித்து துன்புறுத்தினார்கள்.பின்னர் நான் என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினேன்.ஆனால் அவர்கள் என்னை விடவில்லை. அதன் பின் அவர்கள் ஐவரும் இணைந்து என் இரு கண்களையும் ஸ்பூன் வைத்து நோண்டி எடுத்துவிட்டனர். நான் கதறி அழுதேன் என்னை கொன்றுவிடுங்கள் என்று சொன்னேன்".