Skip to main content

கண்டம் விட்டு கண்டம் ஃபுட் டெலிவரி - 30 ஆயிரம் கி.மீ பயணித்த தமிழக இளம்பெண்

Published on 19/11/2022 | Edited on 19/11/2022

 

A young woman who has traveled 30,000 km for cross-continent food delivery

 

நவீனம், தொழில்நுட்பம் என்ற பெயரில் அனைத்துமே உச்சக்கட்ட மாறுதல்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரானது பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு விற்பனைக்கு வருவதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அதுவும் சாத்தியத்தில் முடிந்தது. தற்போது அதையும் தாண்டி உணவு டெலிவரி, ஆட்டோ, டாக்ஸி என அனைத்துமே ஆன்லைன் வசமாகி வருகிறது.

 

இப்படி எத்தனையோ எதிர்பார்த்திருக்க முடியாத மாறுதல்களைக் கூட தொழில்நுட்பம் சாத்தியமாக்கி வருகிற நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் நான்கு கண்டங்களைத் தாண்டி உணவு டெலிவரி செய்துள்ளது பேசு பொருளாகி இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த மானசா என்ற பெண் சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவிற்கு உணவு டெலிவரி செய்துள்ளார். ஆர்டர் செய்தவரிடம் உணவைக் கொண்டு சேர்க்க நான்கு கண்டங்களைத் தாண்டி 30 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்துள்ளாராம் மானசா.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டன் கணக்கில் பிடிபட்ட போலி இஞ்சி பேஸ்ட்; பொதுமக்களே உஷார்

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Tons of fake ginger paste caught; Public beware

உணவு பொருள்களின் தரம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள், போலியான கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் குறித்த வீடியோக்கள், தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரவி வரும் நிலையில், ஹைதராபாத்தில் டன் கணக்கில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹோட்டல்கள் மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் பொருட்கள் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அடிக்கடி திடீர் சோதனையில் ஈடுபட்டு தரம் இல்லாத பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடைகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் கிடைக்கும் இஞ்சி பேஸ்ட் போல ஹைதராபாத்தில் சில நபர்கள் பாக்கெட்டுகளில் போலியாக இஞ்சி பேஸ்ட் தயாரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் சென்ற அதிகாரிகள் அதை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள பொருட்களின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் என்பது தெரியவந்துள்ளது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் செயற்கையான உணவுப் பொருட்கள் மற்றும் வண்ணம், பசை ஆகியவற்றை கலந்து இந்த போலி இஞ்சி பேஸ்ட் தயாரிக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 3 டன் அளவில் போலி இஞ்சி பேஸ்ட் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆடம் 'ஸ்ட்ராங்கா ஒரு டீ போடு'- அட இதற்கும் ரோபோவா 

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Adam 'Stronga Put a Tea' - Oh Robo for this too

தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் இந்த நவீன காலகட்டத்தில் சிறு சிறு விஷயங்களை கூட மனித உழைப்பை குறைத்து தொழில்நுட்பத்தை வைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உலகெங்கும் பெருகி வருகிறது. அந்த வகையில் அண்மையாக வீட்டு வேலைகளை செய்வதற்காக ரோபோக்கள் உருவாக்கப்பட்டது. சமீபத்தில் ஹோட்டலில் சர்வர்களுக்கு பதிலாக ரோபோக்கள் உணவை பரிமாறும் வீடியோ காட்சிகளும் வெளியாகியது.

இந்நிலையில் அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் காபி, டீ உள்ளிட்ட பானங்களை ரோபோ ஒன்று தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது. நெவாடா மாகாணம் பேரடைஸ் நகரை சேர்ந்த 'ரிச் டேக் ரோபாட்டிக்ஸ்' என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பிரத்தியேக ரோபோ டீக்கடைக்காரரைப் போல ஒரு கோப்பையை எடுத்து நன்கு தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு, மனிதர்களைப் போலவே காபி, டீ ஆகியற்றை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது. காபி மட்டுமல்லாது ஐஸ் டீ, காக்டெயில் மது உள்ளிட்ட பானங்களையும் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

இந்த ரோபோவிற்கு ஆடம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் குவிந்து கொண்டு ரோபோ ஆடம்மிடம் டீ, காபி ஆர்டர் செய்து வாங்கும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.