Advertisment

ஆர்டரை மாற்றிய வெயிட்டர்... துப்பாக்கியை எடுத்த இளம்பெண்!

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் மெம்பிஸ் நகரில் அமைந்திருக்கும் மெக் டொனல்ட்ஸ் உணவகத்திற்கு ஆசியா வெஸ்டர் என்ற 22 வயது இளம்பெண் சென்றுள்ளார். அங்கே இளம்பெண் ஆர்டர் செய்த உணவை வெயிட்டர் கொண்டு வந்துள்ளார். பின்பு அந்த உணவிற்கு தொட்டுக்கொள்ள ஜெல்லி ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வெயிட்டரோ ஜெல்லிக்கு பதில் தக்காளி சாஸ் கொண்டு வந்துள்ளார்.

Advertisment

இதனால் வெஸ்டருக்கும் வெயிட்டருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த வெஸ்டர் வெயிடரை நோக்கி திடீரென துப்பாக்கியை நீட்டியுள்ளார். துப்பாக்கியை கண்ட வெயிட்டர் அலறியடித்து கொண்டு ஓடினார். மேலும் அங்குள்ளவர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து, வெயிட்டரை நோக்கி துப்பாக்கியை எடுத்து நீட்டியது அமெரிக்க சட்டப்படி குற்றம் என ஆசியா வெஸ்டரை கைது செய்துள்ளனர்.

GunShot
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe