Advertisment

சார்ஜ் போட்ட செல்போன் குளியல் தொட்டியில் விழுந்ததால் இளம்பெண் பலி!

ரஷியாவின் கிரோவோ நகரை சேர்ந்த 20 வயது இளம்பெண் சுல்யாதியேவா. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த செவ்வாய் கிழமை காலை குளிப்பதற்காக தனது வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்றார். அங்கு அவர் குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பிவிட்டு, அதன் அருகில் உள்ள மின்சார பெட்டியில் தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். பின்னர் அவர் குளியல் தொட்டிக்குள் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார்.

Advertisment

n

அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக சார்ஜ் போடப்பட்டிருந்த அவரது செல்போன் குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்தது. இதில் தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து சுல்யாதியேவாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதற்கிடையே தனது மகள் குளியலறைக்குள் சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சுல்யாதியேவாவின் தாய் உள்ளே சென்று பார்த்தார். அங்கு சுல்யாதியேவா குளியல் தொட்டிக்குள் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு சுல்யாதியேவாவின் தாய் அதிர்ச்சியில் உறைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Advertisment
one killed
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe