Advertisment

மருத்துவமனையில் திருமணம் செய்த காதல் ஜோடி... காரணம் இதுதான்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மைக்கேல் தாம்சன், ஆலியா. இவர்கள் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இருவர் இறந்ததால், அவர்களின் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 21 -ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்திருந்தனர். ஆனால் அப்போதும் அவர்களின் ஆசை ஈடேறவில்லை. திருமணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன்பு மணமகன் மைக்கேலின் தந்தை வில்லியம் அறுவை சிகிச்சைக்காக சன்னிவேல் நகரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததே இதற்கு காரணம்.

Advertisment

திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நாளுக்கு முன்பு வில்லியம் குணமடைய வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனையின் அனுமதி பெற்று, பாதிரியாரை மருத்துவமனைக்கு அழைத்து தனது தந்தை முன்னிலையில் மைக்கேல் திருமணம் செய்து கொண்டார். இந்த சுவாரஸ்மான நிகழ்ச்சியின்போது மணமக்கள், பாதிரியார் ஆகியோர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் உடையை அணிந்திருந்தனர். திருமணம் முடிந்ததும், புதுமணத் தம்பதியருக்கு அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

hospital
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe