Advertisment

இஸ்ரேலுக்கு நெருக்கடி; போரில் களமிறங்கிய ஏமன்

Yemen entered the conflict against Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 3 வாரத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

Advertisment

இதையடுத்து காசா மீது தரைவழித் தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல் அதனைத் தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன தொலைத் தொடர்பு நிறுவனத்தின் செல்போன் கோபுரங்களும் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால், காசாவில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. இணையச் சேவை இல்லாததால் தற்போது என்ன நடக்கிறது என்பது தெரியாமல் உலகத்திலிருந்து காசா தனிமைப்படுத்தப்பட்டு கடும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. இதுவரை 8,500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும், அதில் 60 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

Advertisment

காசாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இனி வரும் காலங்களில் பலி எண்ணிக்கை அதிகரித்து வரும் எனக் கூறப்படுகிறது. நேற்று பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஜபாலியாவில் உள்ள அனைத்து கட்டடங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜபாலியாவிற்கு தஞ்சமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எகிப்து, ஜோடர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி அமைப்பு தற்போது போரில் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே ஈரானில் இருந்து செயல்படும் பலம் வாய்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுடன் சண்டையிட்டு வரும் நிலையில், தற்போது ஹவுதி அமைப்பு அந்த போரில் குதித்துள்ளது இஸ்ரேலை மேலும் கவலையடையச் செய்துள்ளது. பாலஸ்தீன வெற்றிக்காக இந்த தாக்குதல் தொடரும் என ஹவுதி அமைப்பு எச்சரித்துள்ளது. செங்கடலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியுள்ளது. இஸ்ரேல் தற்போது ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி என மும்முனை தாக்குதலை எதிர்கொண்டு வருவதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

israel palestine yeman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe