yemen

Advertisment

ஏமன்நாட்டில் புதிதாக உருவாகியுள்ள அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், அண்டை நாடான சவுதிஅரேபியாவிலிருந்து தங்கள் நாட்டிற்குதிரும்பியதும், அவர்களைக் குறி வைத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து ஏமன்அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் வந்தவிமானம்தரையிறங்கியதும் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 30 பேர் பலியானோதோடு, 50க்கும் மேற்பட்டோர்காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் அமைச்சர்கள் யாரும்பாதிப்படையவில்லை என்று அறிவித்துள்ள ஏமன் அரசு,ஹவுத்திமிலிட்டாஎன்ற அமைப்பு இந்த தாக்குதலைநடத்தியதாகவும், இந்த அமைப்புக்கு ஈரான்ஆதரவு அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.