ADVERTISEMENT

பல மாத போராட்டங்களுக்கு பின்... மகனுக்கு கடைசி முத்தம் தந்த தாய்...

05:36 PM Jan 01, 2019 | kirubahar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஏமனைச் சேர்ந்த அகதியாக்கப்பட்ட இரண்டு வயது சிறுவன் அப்துல்லா ஹசன், பிறந்த போதே மூளை சார்ந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருக்கும் மருத்துவமனையில் தந்தையுடன் தங்கி சிகிச்சை எடுத்து வந்தார். அந்த சிறுவனின் தந்தை ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்றவர், மற்றும் தாய் ஏமனை சேர்ந்தவர். இதனால் அந்த சிறுவனின் தாய்க்கு அமெரிக்காவினுள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. பல மாதங்களாக பல முறை முயற்சி செய்தும், அமெரிக்க அரசின் ஏமன் அகதிகளுக்கு விசா கிடையாது என்ற புதிய சட்டத்தின் காரணமாக அவருக்கு விசா மறுக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து இந்த செய்திகள் ஊடகங்களில் வெளிவந்ததையடுத்து, அந்த பெண்ணுக்கு விசா வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அவரது இரண்டு வயது மகன் இறந்துவிட, அவர் மகனை பார்ப்பதற்காக அவருக்கு அமெரிக்க அரசு விசா வழங்கியது. இறந்த தனது மகனுக்கு தனது கடைசி முத்தங்களை தந்து அவனை பிரிந்தார் அந்த தாய். இந்த சம்பவம் தற்பொழுது உலகம் முழுவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT