Skip to main content

சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 5ஜி ஸ்மார்ட்ஃபோன்...

Published on 26/02/2019 | Edited on 26/02/2019

சாம்சங், ஹவாய் மற்றும் ஓப்போ நிறுவனங்களைத் தொடர்ந்து சியோமி நிறுவனமும், தனது நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்ஃபோன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேசமயம் சியோமி நிறுவனம்தான் முதல் நிறுவனமாக தனது 5ஜி ஸ்மார்ட்ஃபோனின் விலையை தெரிவித்துள்ளது. 

 

mi mix


பார்சிலோனாவில் நடைபெற்ற உலக மொபைல் மாநாட்டில் சியோமி எம்.ஐ. மிக்ஸ் 3 (Mi Mix 3) என்ற தனது நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.


சியோமி எம்.ஐ. மிக்ஸ் 3, 5ஜி ஸ்மார்ட்ஃபோனில் Snapdragon 855 பிராசசர், ஹைப்ர்டிக் கூலிங் சிஸ்டம், 6.39 இன்ச் டிஸ்ப்ளே, மேக்னடிக் ஸ்லைடர், 24 மற்றும் 2 மெகா பிக்சல் என இரண்டு செல்ஃபி கேமரா, பின் பக்கம் இரண்டு 12 மெகா பிக்சல் கேமரா என வெளியாகியுள்ளது. இந்த 5ஜி ஸ்மார்ட்ஃபோன் இந்திய மதிப்பில் ரூ. 48,000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொலைத் தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலர் எஸ்.கே. குப்தா, இந்தியாவில் 2022-ம் ஆண்டு முதல் 5ஜி சேவை தொலைத் தொடர்புத்துறையில் பின்பற்றப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இன்று முதல் 5ஜி-தொடங்கி வைக்கிறார் மோடி

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

Modi will launch 5G from today

 

அதிவேக இணைய சேவையான 5ஜி சேவையைப் பொறுத்தவரையில் அலைகற்றை ஏலம் அனைத்தும் முடிந்து விட்டன. 5ஜி அலைகற்றை அதிகளவில் வாங்கி ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது. மேலும், குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனைக் கொண்டு வருவதற்கு முழு முயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

 

இந்த நிலையில், அதிவேக இணைய வசதியை வழங்கவுள்ள 5ஜி தொழில்நுட்பம், இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதற்காக, டெல்லியில் பிரகதி மைதானத்தில் இன்று  பிரதமர் நரேந்திர மோடி 5ஜி தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

 

முதலில் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5 ஜி அமலுக்கு வர இருக்கிறது. இரண்டு ஆண்டு காலத்திற்கு பின் 5 ஜி நாடு முழுவதும் அமலுக்கு வர இருக்கிறது.

 

 

Next Story

பிரபல நடிகையின் 5ஜி வழக்கு; அபராத தொகையை குறைத்த உயர்நீதிமன்றம்

Published on 28/01/2022 | Edited on 28/01/2022

 

actress Juhi Chawla 5g case reduces fine delhi high court

 

1984 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற  ஜூஹி சாவ்லா பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிகை, தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட ஜூஹி சாவ்லா தற்போது ஷாருக்கானுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியின் முதலீட்டாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.  

 

சமீபத்தில் நடிகை ஜூஹி சாவ்லா இந்தியாவில் 5ஜி சேவை அமல்படுத்தப்பட்டால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் பாதிக்கக்கூடும் எனக் கூறி அதை தடை செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததோடு நடிகை ஜூஹி சாவ்லாவிற்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்தது.

 

இதனைத்தொடர்ந்து அபராதத்தை குறைக்க கோரி ஜூஹி சாவ்லா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் அபராத தொகையை ரூ.2 லட்சமாக குறைத்ததுடன், நீதிபதி கூறிய கடுமையான வார்த்தைகளையும் நீக்கி உத்தரவிட்டது.