ADVERTISEMENT

சீன ராணுவத்திற்கு அதிபர் போட்ட உத்தரவால் அதிகரிக்கும் பதட்டம்...

12:52 PM May 27, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT


லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் இந்தியச் சீன ராணுவங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டமான சூழலுக்கு மத்தியில், எந்த மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி சீன அதிபர் அந்நாட்டு ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT


அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் இந்திய- சீன எல்லை பிரச்சனையால் பதட்டம் நிலவி வருகிறது. வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளைச் சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக சிக்கிம் பகுதியில் கடந்த மாதம் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியது.

இந்நிலையில் சீன எல்லைப்பகுதியை விரைவாக அடையும் வகையில், லடாக்கில் இந்தியா அமைத்துவரும் புதிய சாலையால் அதிருப்தியடைந்துள்ள சீனா, அப்பகுதியில் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகவும், இது 6-ஆம் தேதி காலை வரை நீடித்ததாகவும் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் படைகளைக் குவித்து வருகிறது. இந்த நிலையில், எந்த மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி சீன அதிபர் அந்நாட்டு ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.


பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ.) மற்றும் மக்கள் ஆயுதமேந்திய காவல்துறையின் தூதுக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மோசமான சூழ்நிலைகளைப் பற்றிச் சிந்திக்கவும், பயிற்சி மற்றும் போர் தயார்நிலையைச் சரிபார்க்கவும் அனைத்து வகையான சிக்கலான சூழ்நிலைகளையும் உடனடியாகவும் திறம்படவும் கையாளவும், தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களை உறுதியுடன் பாதுகாக்கவும் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இருநாடுகளுக்கும் மத்தியில் பதட்டமான சூழல் நிலவிவரும் நிலையில், சீன அதிபரின் இந்தப் பேச்சு இருநாடுகளுக்கும் இடையேயான பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT