Advertisment

செயற்கைக்கோளுக்கும் தடுப்பூசிக்கும் ஒரே பெயர்... தடுப்பூசியை வாங்கும் போட்டியில் 20 நாடுகள்!!!

The only name for the satellite vaccine ... 20 countries in competition to buy Russia's Sputnik-5-vaccine

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உலகநாடுகளின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக நிலைகுலைய வைத்தோடு, உலகின்ஒட்டுமொத்த சிந்தனையையும் தன்பக்கம் திருப்பிய கரோனாவைரஸிற்குதடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளில் ஈடுபட்டிருந்தாலும்,ரஷ்யா அதற்கான முதல் அடித்தளத்தை உலக நாடுகள் மத்தியில் பதிவு செய்திருந்ததையடுத்து, தற்போது தடுப்பூசியை கண்டுபிடித்துபயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது ரஷ்யா.

Advertisment

ரஷ்யா கண்டுபிடித்துள்ள இந்த கரோனா தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-5என பெயரிடப்பட்டுள்ளது.ரஷ்ய அதிபர் புடின் அதிகாரப்பூர்வமாக கரோனாதடுப்பூசி ஸ்புட்னிக்-5குறித்ததகவலை வெளியிட்டுள்ளார். உலகிலேயே முதன்முறையாக ஸ்புட்னிக் என்ற பெயரில் செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியரஷ்யாவேதற்பொழுது என்ற கரோனா தடுப்பூசியும்கண்டுபிடித்து அதற்கான பெயரையும் ஸ்புட்னிக்-5 என்றே சூட்டியுள்ளது.

Advertisment

தற்போது ரஷ்யா கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பூசியைபெற 20 நாடுகள் போட்டியிடுவதாகவும், 100 கோடிக்கும் மேலான தடுப்பூசிகளை வாங்க ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை வாங்குவது குறித்து இந்தியாவின் தேசிய நிபுணர் குழு இன்று ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் தரம்,செயல்திறன்கள் குறித்த எந்த தகவல்களும் முழுமையாக கிடைக்கப்பெறவில்லைஎனசுகாதார அமைப்பின் அமெரிக்க பிராந்திய உதவி இயக்குனர் சர்வாஸ் தெரிவித்துள்ளார்.

Russia corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe