Advertisment

உலகின் இளம் வயது பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த 94 வயது பிரதமர்!

பின்லாந்து நாட்டில் சமூக ஜனநாயக கட்சி தலைமையில் ஐந்து கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பிரதமராக இருந்த ஆண்டி ரின்னி அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சமூக ஜனநாயக கட்சியின் சன்னா மரின் என்ற பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த வாரம் மரின் பிரதமராகப் பதவியேற்க இருக்கிறார். அப்போது அவர் உலகின் இளம் வயது பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரராவார்.

Advertisment

34 வயதாகும் மரினுக்கு வாழ்த்து கூறியுள்ள உலகின் வயது முதிர்ந்த பிரதமரான மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது, ஓர் அறிவுரையையும் கூறியிருக்கிறார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி கொடுத்த முகமது, " இளமையின் ஆற்றலில் நம்பிக்கை வைக்கும் அதே நேரத்தில், வயதானவர்களின் அனுபவத்துக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.

Advertisment
MALASIYA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe