உலகிலேயே மிகவும் பழமையான காலடித்தடம் சிலி நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/footprint.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த 2010 ஆம் ஆண்டு சிலி நாட்டின் தென்பகுதியில் உள்ள மலை பகுதியில் ஆராய்ச்சி துறை மாணவர் ஒருவர் ஆராய்ச்சி செய்தபோது இந்த கால் தடத்தை கண்டறிந்தார். முதலில் ஏதேனும் விலங்கு கால்தடமாக இருக்கக்கூடும் என கருதப்பட்ட இதனை அமெரிக்க ஆய்வாளர்கள் கடந்த 8 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தனர்.
தற்போது அந்த ஆராய்ச்சியின் முடிவில், அது மனிதகாலடி தடம் தான் என்றும், அது 15,600 ஆண்டுகள் பழமையானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேற்றால் ஆன மென்பாறையில் படிந்த இந்த கால் தடம் அதன் பின்னதான கால ஓட்டத்தில் கடினமான பாறையாகஇறுகி அதன் மேல் அந்த தடம் அப்படியே பதிந்ததாக கூறப்பட்டுள்ளது. 15,000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த கால் தடத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியமானதாகவும், சுவாரஸ்யமானதாகவும் விவரித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)