Advertisment

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்; இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

World's Most Powerful Passport List; Do you know how many places in India?

Advertisment

உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பலவீனமான பாஸ்போர்டுகள் குறித்து தரவரிசையை ஹென்ஸி பார்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது. அந்த தரவரிசையை, சர்வதேச விமான போக்குவரத்து சங்க தரவுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட்டுகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அதில், விசா இல்லாமல், பாஸ்போர்ட் மூலம் மட்டுமே உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கும் நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் ‘சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள்’ என்று கருதப்படுகிறது. இந்த சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் தரவரிசை பட்டியலில், 194 நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன.

அந்த வகையில், இந்த பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள்முதலிடத்தில் உள்ளனர். அதாவது, இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் உலக அளவில் 194 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். இதையடுத்து, இரண்டாவது இடங்களை பிடித்துள்ள தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் 193 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும்.

இதனை தொடர்ந்து, ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள், 192 நாடுகளுக்குள் விசா இல்லாமல் செல்ல முடியும். அதனை கருத்தில் கொண்டு இந்த நாடுகள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இந்த தரவரிசை பட்டியலில், சீனா 62வது இடத்தையும், இந்தியா 80வது இடத்தையும் பிடித்துள்ளது.

Advertisment

இந்திய பாஸ்போர்ட் மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும். அதில் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, உள்ளிட்ட சுற்றுலா நாடுகளும் அடங்கும். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், இந்த தரவரிசையில் 101வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், ஈராக் 102வது இடத்தையும், ஆப்கானிஸ்தான் 104வது இடத்தையும் பிடித்துள்ளது.

Passport
இதையும் படியுங்கள்
Subscribe