விண்வெளி வரலாற்றிலேயே முதன்முறையாக பெண்கள் மட்டுமே செய்த முதல் விண்வெளி நடைபயணம் நேற்று நடந்துள்ளது.
நாசா விண்வெளி ஆய்வு மையத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெய்ர் ஆகிய இருவரும் பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறி விண்வெளியில் மிதந்தபடி பழுதடைந்த மின்சார நெட்வொர்க்கை சரிசெய்த நிகழ்வு நேற்று நடந்தது. மனித விண்வெளி பயண வரலாற்றிலேயே முதன்முறையாக இரு பெண்கள் மட்டும் தனியாக இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது இதுவே முதன்முறையாகும். முதன்முறையாக விண்வெளியில் நடந்த இந்த சாதனையை உலகநாடுகளை சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் இனி இயல்பான ஒன்றாக மாற வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.