Skip to main content

உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ மெமரி கார்டு விற்பனைக்கு வந்தது...!

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சான்டிஸ்க் நிறுவனம் உலகின் முதல் 1 டி.பி. மைக்ரோ எஸ்.டி. எனப்படும் மெமரி கார்டினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தற்போது ஸ்பெயின், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் அமேசான் ஆன்லைன் தளத்தில் விற்பனைக்கும் வந்துள்ளது.

 

sd card

 

ஸ்மார்ட்போன்களின் இன்டர்னல் மெமரி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சான்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. எக்ஸ்ட்ரீம் மைக்ரோ மெமரி கார்டை தயாரித்து உள்ளது.
 

புதிய மைக்ரோ மெமரி கார்டு மூலம் மொபைலிலேயே அதிக மெமரி கொண்ட தரவுகளை சேமிக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக சான்டிஸ்க் நிறுவனம் 1 டி.பி. மைக்ரோ மெமரி கார்டினை கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் மாநாட்டில் அறிமுகம் செய்தது. தற்போது இது அமேசான் ஆன்லைன் தளத்தில் ரூ. 31,540 என்று இந்த கார்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதுதான் உலகிலேயே முதல் 1 டி.பி. மெமரி கார்டு என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இது என் முதல் போலீஸ் ஸ்டேஷன்; வீரப்பனுடன் நேரடி துப்பாக்கிச் சண்டை” - நினைவுகளைப் பகிர்ந்த டிஜிபி சைலேந்திரபாபு   

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

nn

 

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விரைவில் ஓய்வுபெற இருக்கும் நிலையில் அவர் முதன் முதலாக காவல் அதிகாரியாகப் பணியைத் தொடங்கிய ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்திற்கு வருகை புரிந்து பார்வையிட்டார்.

 

அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் தான் என்னுடைய முதல் காவல் நிலையம். 1989 ஆவது ஆண்டு இந்த காவல் நிலையத்தில்தான் நான் முதல் பணியை ஆரம்பித்தேன். கோபிசெட்டிபாளையம் என்பது இன்றைக்கு இருக்கக்கூடிய கோபிசெட்டிபாளையம் உட்கோட்டம், சத்தியமங்கலம் உட்கோட்டத்தை அடக்கிய பகுதி. அப்பொழுது வீரப்பன் இங்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த நேரம். சந்தன மரத்தை கடத்தி விற்பது; யானைகளை வேட்டையாடுவது; பல வன அதிகாரிகளை கொலை செய்தது இதுபோன்று நடந்தபோது தான் நான் இங்கு வந்திருந்தேன்.

 

வீரப்பனுடன் நான்கு முறை துப்பாக்கி சண்டை நடத்தி இருக்கிறேன். பலரை பிடித்திருக்கிறோம். அப்பொழுது மிகப்பெரிய சவாலாக இருந்த உட்கோட்டம் இப்பொழுது ரொம்ப அமைதியாக இருக்கிறது. காவல் நிலையத்தில் வழக்குகளை உடனுக்குடன் பதிவு செய்திருக்கிறார்கள். காவல் நிலையத்தில் எல்லா பதிவேடுகளையும் நான் பார்வையிட்டேன். சாதாரணமான வழக்குகள் கூட மொபைல் ஃபோன் திருட்டு போனால் கூட அதை பதிவு செய்து விசாரணை செய்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். இருசக்கர வாகனங்கள் காணாமல் போனால் கூட வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து சிலவற்றை பிடித்துள்ளார்கள். சிலவற்றை பிடிக்க முடியவில்லை.

 

காவல் நிலையத்துக்கு வருபவர்களை வரவேற்பதற்காக தமிழக முதல்வர் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். காவல் நிலைய வரவேற்பு அதிகாரி. அவர்கள் யார் என்றால் காவல்துறையில் பணியாற்றும் போது உயிர் நீத்த காவலர்களுடைய குழந்தைகளுக்கு கருணை அடிப்படையில் இந்த பணியை கொடுத்துள்ளோம். அவர்கள் எல்லாருமே பட்டதாரிகள், இன்ஜினியரிங் படித்தவர்களாக இருக்கிறார்கள். எனவே காவல் நிலையத்திற்கு வருபவர்களை பரிவோடு பேசி உங்களுடைய நிலைமை என்ன; பிரச்சனை என்ன; உங்களுடைய புகார் என்ன; நீங்கள் யாரை சந்திக்க வேண்டும் எனக் கேட்டு, ஒருவேளை இன்ஸ்பெக்டர் இல்லாமல் இருந்தால் கூட உடனடியாக இன்ஸ்பெக்டரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக சொல்லி, உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து பிறகு உங்களுடைய பிரச்சனை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்கும் அளவிற்கு வரவேற்பாளர்களை வைத்திருக்கிறோம். மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது'' என்றார்.

 

 

Next Story

''நடந்துதான் பள்ளிக்கு வருவேன்; அதற்கான காரணத்தை இப்போது சொல்ல முடியாது'' - நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட மு.க. ஸ்டாலின்

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மேல்நிலைப் பள்ளியில் இன்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையில் கலந்து கொண்டார். நிகழ்வின் மேடையில் பேசிய தமிழக முதல்வர், ''மாணவப் பருவம் என்பது யாருக்கும் கிடைக்காத காலம். இந்த மாதிரியான பள்ளிக் காலத்தில்தான் நாம் மகிழ்ச்சியோடு இருந்தோம். அத்தகைய பள்ளிக்காலத்தில் எப்படி எல்லாம் துள்ளித் திரிந்தோம் என்பதை எல்லாம் நான் நினைத்து நினைத்துப் பார்த்தேன்.

 

இந்தப் பள்ளியில் நான் படித்த பொழுது நமது தமிழாசிரியர் ஜெயராமன் சொன்னதுபோல் என்னுடைய அப்பா அன்றைக்குப் போக்குவரத்துத் துறையின் அமைச்சராக இருந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகுதான் முதலமைச்சராக வருகிறார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது நான் எந்த பந்தாவும் இல்லாமல் ஒரு அமைச்சருடைய மகனாக நடந்து கொள்ளவில்லை. நான் மட்டுமல்ல நான் அப்படி நடந்து கொள்வதை என்னுடைய தலைவர், என்னுடைய தந்தை கலைஞரும் விரும்பமாட்டார். இதெல்லாம் என்னுடன் படித்தவர்களுக்குத் தெரியும். என்னுடைய ஆசிரியர்களுக்கு இது தெரிந்திருக்கிறது என்றால் என் கூட படித்தவர்களுக்கும் இது தெரியும்.

 

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நான் கோபாலபுரத்தில் இருந்தபோது அமைச்சரின் மகனாக இருந்தும் பள்ளிக்கூடத்திற்கு பேருந்தில்தான் வருவேன். சில நேரங்களில் சைக்கிளில் வந்திருக்கிறேன். வீட்டிலிருந்து ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் வரை நடந்து வந்து பல்லவன் போக்குவரத்து கழகத்தின் '29 சி' என்ற பேருந்தைப் பிடித்து அந்த பஸ்ஸில் ஏறி ஸ்டெர்லிங் ரோட்டில் வந்து இறங்கி, அங்கிருந்து மூன்று, நான்கு கிலோமீட்டர் நடந்துதான் பள்ளிக்கு வருவேன். நடந்து வருவதற்குப் பல காரணங்கள் உண்டு அதெல்லாம் இப்பொழுது சொல்ல முடியாது. அதெல்லாம் பழைய நினைவுகள். அப்படித்தான் இந்த பள்ளிக்கூடத்துக்கு நான் வந்து சென்றேன். அதுதான் என்னுடைய உண்மையான இயல்பு. அதே மாதிரி தான் இப்பொழுதும் இங்கே நான் முதல்வராக வரவில்லை என்று சொன்னேன்.

 

உங்கள் நண்பராகத்தான் வந்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் எனக்கு இந்த செக்யூரிட்டி போன்ற பாதுக்காப்பு முறைகள் எல்லாம் இல்லை என்றால், அவர்கள் ஒத்துக் கொண்டால் நிச்சயமாக நான் பஸ் அல்லது சைக்கிளில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கணும். ஆனால் செக்யூரிட்டி விட மாட்டாங்க. அது உங்களுக்குத் தெரியும். மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன்'' என்றார்.