Skip to main content

உலகளவில் கரோனா பலி 8 ஆயிரத்தை நெருங்குகிறது!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

உலகளவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7,965 ஆக அதிகரித்துள்ளது. 165 நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 1,98,214 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 81,734 பேர் குணமடைந்துள்ளனர். 

world wide coronavirus update status

சீனாவுக்கு அடுத்தபடியாக கரோனாவால் இறப்போர் எண்ணிக்கை இத்தாலியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவால் சீனாவில் 3,237, இத்தாலியில் 2,503, ஈரானில் 988, ஸ்பெயினில் 533 பேர் உயிரிழந்துள்ளனர். 


இந்தியாவில் கரோனாவுக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 137 லிருந்து 143 ஆக அதிகரித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நியூஸ் க்ளிக் அலுவலகத்திற்கு சீல்!

Published on 03/10/2023 | Edited on 03/10/2023

 

News click office seal

 

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

 

டெல்லியில் உள்ள நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலக நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்த சோதனையின் போது பத்திரிகையாளர்களிடம் இருந்து மொபைல் போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.  இந்நிலையில் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு டெல்லி போலீசார் சீல் வைத்துள்ளனர்.

 

சீனாவுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய பணம் பெற்றதாக புகார் எழுந்ததால் நியூஸ் க்ளிக் இணைய ஊடக நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். மேலும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் கீழ் நியூஸ் கிளிக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே நியூஸ் க்ளிக் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.