உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கரோனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65,449 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 15,362, ஸ்பெயினில் 12,418, அமெரிக்காவில் 8,454, பிரான்சில் 7,560, பிரிட்டனில் 4,313, ஈரானில் 3,452, சீனாவில் 3,329, மலேசியாவில் 61, சிங்கப்பூரில் 6, பாகிஸ்தானில் 45, இலங்கையில் 5 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
உலகளவில் கரோனாவால் 12,10,421 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,51,822 பேர் குணமடைந்துள்ளனர்.