ADVERTISEMENT

உலகளவில் கரோனாவுக்கு 5.80 லட்சம் பேர் பலி!

09:05 AM Jul 15, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,46,431 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,80,248 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 78,39,676 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 65,559 பேருக்குக் கரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 35,45,042 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 7,39,947, ஸ்பெயினில் 3,03,699, பெருவில் 3,33,867, சிலியில் 3,19,493, பிரிட்டனில் 2,91,373, சீனாவில் 83,572, ஈரானில் 2,62,173, மெக்ஸிகோ 3,04,435, தென் ஆப்பிரிக்காவில் 2,98,292, சீனாவில் 83,605 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பிரேசிலில் ஒரே நாளில் 43,245 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 19,31,204 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல் பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,341 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 74,262 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 929 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,39,137 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 11,614, பெருவில் 12,229, தென் ஆப்பிரிக்காவில் 4,364, ஸ்பெயினில் 28,409, பிரிட்டனில் 44,968, சிலியில் 7,069, ஸ்பெயினில் 28,396, மெக்ஸிகோவில் 35,491, ஈரானில் 13,211, சீனாவில் 4,634 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT