Skip to main content

உலகளவில் 1.19 கோடி பேருக்குக் கரோனா!

 

WORLD WIDE CORONAVIRUS PEOPLES

 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,40,627 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,45,622 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 68,44,283 ஆக உயர்ந்துள்ளது. 

 

அமெரிக்காவில் ஒரே நாளில் 55,243 பேருக்கு கரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 30,96,885 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 6,94,230, ஸ்பெயினில் 2,99,210, பெருவில் 3,09,278, சிலியில் 3,01,019, பிரிட்டனில் 2,86,349, சீனாவில் 83,565, ஈரானில் 2,45,688, மெக்ஸிகோ 2,61,750 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

 

பிரேசிலில் ஒரே நாளில் 48,458 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு 16,74,655 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல் பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,312 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 66,868 ஆக உயர்ந்துள்ளது. 

 

அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 992 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,33,971 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 10,494, பெருவில் 10,952, ஸ்பெயினில் 28,392, பிரிட்டனில் 44,391, இத்தாலியில் 34,854, சிலியில் 6,384, ஸ்பெயினில் 28,392, மெக்ஸிகோவில் 31,119, ஈரானில் 11,931, சீனாவில் 4,634 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்