ADVERTISEMENT

உலகளவில் 80 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

08:19 AM Jun 15, 2020 | santhoshb@nakk…


ADVERTISEMENT


உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT


உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,82,822 ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,35,166 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41,03,984 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் ஒரே நாளில் 19,830 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு 21,62,054 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 5,28,964, பிரிட்டனில் 2,95,889, ஸ்பெயினில் 2,91,008, இத்தாலியில் 2,36,989, பெருவில் 2,29,736, ஜெர்மனியில் 1,87,671, ஈரானில் 1,87,427, துருக்கியில் 1,78,239, பிரான்சில் 1,57,220, பிரேசிலில் 8,67,882 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.


சீனாவில் புதிதாக 49 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,181 ஆக உயர்ந்துள்ளது. பெய்ஜிங்கிலும் தொற்று அதிகரிப்பால் கரோனாவின் இரண்டாவது அலை உருவாகியுள்ளதா? என சீன மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பிரேசிலில் கரோனா வைரஸ் பாதிப்பால் ஒரேநாளில் 598 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 43,389 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கரோனாவுக்கு ஒரே நாளில் 326 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 1,17,853 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 6,948, பிரிட்டனில் 41,698, ஸ்பெயினில் 27,136, இத்தாலியில் 34,345, பெரு 6,688, ஜெர்மனியில் 8,870, ஈரானில் 8,837, துருக்கியில் 4,807, பிரான்ஸில் 29,407, சீனாவில் 4,634 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT