ADVERTISEMENT

உலகளவில் 50.82 லட்சம் பேருக்கு கரோனா!

07:59 AM May 21, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,82,660 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,29,294 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 20,20,157ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT


அமெரிக்காவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 15,91,991 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 3,08,705, ஸ்பெயினில் 2,79,524, பிரிட்டனில் 2,48,293, பிரேசிலில் 2,93,357, இத்தாலியில் 2,27,364, பிரான்சில் 1,81,575, ஜெர்மனியில் 1,78,531, துருக்கியில் 1,52,587, ஈரானில் 1,26,949, சீனாவில் 82,965 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவில் கரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 94,994 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 2,972, ஸ்பெயினில் 27,888, பிரிட்டனில் 35,704, பிரேசிலில் 18,894, இத்தாலியில் 32,330, பிரான்சில் 35,704, ஜெர்மனியில் 8,270, துருக்கியில் 4,222, ஈரானில் 7,183, சீனாவில் 4,634 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT