உலகளவில் 2.94 கோடி பேருக்கு கரோனா!

world wide coronavirus peoples

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனா வைரஸ் தொற்றால் 2,94,33,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் உலகளவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,12,64,981 ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,32,390 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில்- 67,48,858, பிரேசிலில்- 43,49,544, ரஷ்யாவில்- 10,68,320, பெருவில்- 7,33,860, தென் ஆப்பிரிக்காவில்- 6,50,749, மெக்ஸிகோவில்- 6,68,381, சிலியில்- 4,36,433, கொலம்பியாவில்- 7,21,892, ஸ்பெயினில்- 5,93,730, ஈரானில்- 4,04,648 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அமெரிக்காவில்- 1,98,974, சிலியில்- 12,013, ரஷ்யாவில்- 18,635, பிரேசிலில்- 1,32,117, மெக்ஸிகோவில்- 70,821, கொலம்பியாவில்- 23,123, இத்தாலியில்- 35,624, பிரான்ஸில்- 30,950, ஸ்பெயினில்- 29,848, ஈரானில்- 23,313, பிரிட்டனில்- 41,637 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

coronavirus peoples WORLD WIDE
இதையும் படியுங்கள்
Subscribe