உலகளவில் கரோனாவுக்கு 9.07 லட்சம் பேர் உயிரிழப்பு!

WORLD WIDE CORONAVIRUS PEOPLES

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.80 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,07,256 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் உலகளவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில்- 65.48 லட்சம், பிரேசிலில்- 41.99 லட்சம், ரஷ்யாவில்- 10.41 லட்சம், பெருவில்- 7.02 லட்சம், தென் ஆப்பிரிக்காவில்- 6.42 லட்சம், மெக்ஸிகோவில்- 6.42 லட்சம், சிலியில்- 4.27 லட்சம், ஸ்பெயினில்- 5.43 லட்சம், ஈரானில்- 3.93 லட்சம், பிரிட்டனில்- 3.55 லட்சம், பாகிஸ்தானில்- 2.99 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில்- 1.95 லட்சம், பிரேசிலில்- 1,28,653, மெக்ஸிகோவில்- 68,484, இத்தாலியில்- 35,577, பிரான்ஸில்- 30,794, ஸ்பெயினில்- 29,628, பிரிட்டனில்- 41,594 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

coronavirus peoples WORLD WIDE
இதையும் படியுங்கள்
Subscribe