Skip to main content

அமெரிக்காவில் ஒரே நாளில் 13 ஆயிரம் பேருக்கு கரோனா!

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

world wide coronavirus one day strength increased  usa

உலகளவில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியது. அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 13,347 பேருக்குக் கரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68,203 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,027 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் வேகமாகப் பரவும் கரோனாவால் ஒரே நாளில் சுமார் 247 பேர் உயிரிழந்துள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு! 

Published on 20/11/2022 | Edited on 20/11/2022

 

Trump's Twitter account is back in action!

 

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு 22 மாதங்களுக்கு பின் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. 

 

சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வந்ததால், ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு முடக்கி வைக்கப்பட்டது. அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதை அடுத்து, பல்வேறு அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். ட்விட்டர் ஊழியர்கள் கூண்டோடு ராஜினாமா செய்து வரும் சூழலிலும் ட்விட்டர் தொடர்பான பல்வேறு முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறார். 

 

அந்த வகையில், ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கை மீண்டும் செயல்படுத்தலாமா என வாக்கெடுப்பு நடத்தினார். இதற்கு பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், அவரது ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

 

எலான் மஸ்க்கின் இந்த நடவடிக்கைக்கு ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.