உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,21,412 ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,004 பேர் குணமடைந்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/spanish444.jpg)
உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,956 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் சுமார் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
ஒரே நாளில் கரோனாவுக்கு 756 பேர் இறந்ததால் இத்தாலியில் உயிரிழப்பு 10,779 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் ஒரே நாளில் 5,217 பேருக்கு கரோனா உறுதியானதால் பாதிப்பு 97,689 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் 81,439, ஸ்பெயினில் 80,110, ஜெர்மனியில் 62,095, பிரான்சில் 40,174, ஈரானில் 38,309, பிரிட்டனில் 19,522, சிங்கப்பூரில் 844, பாகிஸ்தானில் 1,597, இலங்கையில் 117 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஸ்பெயினில் ஒரே நாளில் கரோனாவுக்கு 821 பேர் இறந்ததால் உயிரிழப்பு 6,803 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,475 ஆக உயர்ந்துள்ளது. இந்த நாட்டில் கரோனாவுக்கு ஒரே நாளில் 255 பேர் இறந்தனர். மேலும் ஒரே நாளில் புதிதாக 18,276 பேருக்குகரோனா உறுதியானதால் பாதிப்பு 1,41,854 ஆக உயர்ந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)