/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/CORONA 4563_0.jpg)
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,05,83,878 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,13,861 ஆக அதிகரித்துள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 57,94,489 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 46,042 பேருக்கு கரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 27,27,853 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் 6,47,849, ஸ்பெயினில் 2,96,351, பிரிட்டனில் 3,12,654, இத்தாலியில் 2,40,578, பெருவில் 2,85,213, சிலியில் 2,79,393, ஈரானில் 2,27,662, சீனாவில் 83,531 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பிரேசிலில் ஒரே நாளில் 37,997 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு 14,08,485 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல் பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,271 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 59,656 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கரோனாவுக்கு மேலும் 764 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,30,122 ஆக அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் 9,320, பெருவில் 9,677, ஸ்பெயினில் 28,355, பிரிட்டனில் 43,730, இத்தாலியில் 34,767, சிலியில் 5,688, சீனாவில் 4,634, ஈரானில் 10,817 பேர் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
Follow Us